நபி (ஸல்) விட்டுச்சென்ற 10 தலைவரகள்

கற்பலா 34: 1) நபிகள் நாயகம்(ஸல்) பிறகு இருந்த சூழ்நிலை: நபிகள் நாயகம்(ஸல்) இருந்த வரை எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எட்டப்படும். நபிகளாரின்(ஸ...

கற்பலா 34:

1) நபிகள் நாயகம்(ஸல்) பிறகு இருந்த சூழ்நிலை:

நபிகள் நாயகம்(ஸல்) இருந்த வரை எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எட்டப்படும். நபிகளாரின்(ஸல்) முடிவு இறுதியானதாகும். அதில் யாரும் முரண்பாடுகள் கொண்டு நின்றதில்லை. ஏற்று கொள்வார்கள். ஆனால் நபிகளாருக்கு(ஸல்) பின் அப்படி முடிவு எடுக்கும் நிலையில்லை. மஸூரா அடிப்படையில் தான் எடுக்கப்படும் வஹி வரும் நிலையும் இல்லை. எனவே அந்த சூழ்நிலையை சமாளிக்கும் பொறுப்பு அபுபக்கர் (ரலி) அவர்களிடம் வந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) தீனை அண்டை நாடுகளுக்கு பரப்பும் பணியை சிறிது தொடங்கிவிட்டார்கள். ஒரு சவாலான வேலையை தந்துவிட்டு சென்றார்கள். நபிகளார்(ஸல்) மரணத்தின் போது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மக்கா, மதினா, தஹிஃப், ஹூனைன், சிறுசிறு கிராமங்கள், நஜ்ரான், யமன், தபூக் மற்றும் சில பகுதிகள் வந்துவிட்டன.

இந்த நிலையில் அபுபக்கரிடம்(ரலி) இதை விரிவு செய்யும் பொறுப்பு வந்தது. ஆனால் இந்த விரிவு படுத்தும் பணி இனி செய்ய தேவையில்லை என்று சிலர் பேசிக்கொண்டனர். அதை அவர் சரி செய்தார். மேலும் ஏற்கனவே இஸ்லாமிய அரசின் கீழ் இருந்த பகுதி மக்கள் சிலர் நாங்கள் ஜகாத் தரமாட்டோம் என்றும் எங்களிடையே இன்னொரு நபி வந்துள்ளார் எனவும் பிரச்சினை செய்கிறார்கள். இந்த பகுதிகளை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது முக்கியமாக இருந்தது. அப்போது தான் பிற நாடுகளுக்கு பயம் இருக்கும்.

2) சஹப்பாக்களின் படித்தரங்களை அறிவது முக்கியம்:

Al-Hujurat 49:14

قَالَتِ الْأَعْرَابُ أَمَنا قُل لَّمْ تُؤْمِنُوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمَانُ في قلوبِكُمْ وَإِن تُطِيعُوا اللهَ وَرَسُولَهُ لَا يَلتُكُمْ مِنْ أَعْمَالِكُمْ شَيْئًا

إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

"நாங்களும் ஈமான் கொண்டோம்" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், "நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. "ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

இந்த கிராம அரபிகள் முஹ்மின்கள் இல்லை. நபிகளார்(ஸல்) இருந்த வரை அவருக்கு கட்டுப்பட்டு இருந்த முஸ்லீம்கள். நபிகளாருக்கு(ஸல்) பின் கட்டுப்பட மாட்டோம் என்று முதலில் ஜகாத்திலிருந்து தருவதில் ஆரம்பித்தார்கள். இதை விட்டிருந்தால் இஸ்லாத்தை சீரழித்திருப்பார்கள்.

இவர்கள் இஸ்லாத்தை ஏற்றது தஃவ்பாவின் முதல் 5 வசனங்கள் இறங்கிய பின். அதாவது இந்த அரபு தீபகற்பத்தில் நீங்கள் முஸ்லீமாக மட்டும் இருந்தால் தான் வாழ முடியும் என்று நான்கு மாதங்கள் அனுமதி கொடுத்த பின் தான் ஏற்றார்கள். இவர்கள் ஒரு கட்டாயத்தினால் இணைந்தவர்கள். ஏனேனில் இந்த ஹிஜாஸ் பகுதி மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக எந்த தீய செயல்களும் தடுக்கப்பட்ட பகுதியாக இருக்க வேண்டும் என்பது நியதி. இது இஸ்லாத்தின் எல்லை பகுதி. மற்ற பகுதிகளில் அவர்கள் சென்று வாழலாம்.

இதே இந்த சஹப்பாக்களில் முக்கியமானவர்களாக நபிகளார்(ஸல்) பத்து பேரை முழுமையாக திருப்தி கொண்டார்கள். அவர்களுக்கு பிரதிநிதியை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்பட்டது.

மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


)கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத்தன்று உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். மேலும், அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் (இன்று) ஒரு கோழி என்னை மூன்று முறை கொத்துவதைப் போன்று (கனவு) கண்டேன். இதற்கு என் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்றே நான் (விளக்கம்) கண்டேன். மக்களில் சிலர் நான் (எனக்குப் பின்னால்) என் (ஆட்சிக்குப்) பிரதிநிதி (கலீஃபா) ஒருவரை அறிவிக்குமாறு கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் தனது மார்க்கத்தையோ, தன் (அடியார்களின்) ஆட்சித் தலைமையையோ, நபி (ஸல்) அவர்களை எதனுடன் அனுப்பிவைத்தானோ அதையோ பாழாக்கிவிடமாட்டான். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அத்தகைய இந்த ஆறுபேர் ஆட்சித் தலைமை குறித்துத் தம்மிடையே கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.

சிலர் இந்த விஷயத்தில் என்னைக் குறை கூறிவருவது எனக்குத் தெரியும். நான் (சில நேரங்களில்) அவர்களை இஸ்லாத்திற்காக எனது இந்தக் கையால் அடித்திருக்கிறேன். அவர்கள் இவ்வாறு செய்வதை மார்க்க அங்கீகாரமுடைய ஒரு செயலாக நினைத்)தால் அத்தகையோர்தாம் இறைவனின் விரோதிகளும் வழிகெட்ட இறைமறுப்பாளர்களும் ஆவர்.

நான் எனக்குப் பின்னால் "கலாலா"வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச் செல்லவில்லை. நான், இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்துகொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். "உமரே! அந்நிஸா அத்தியாயத்தின் கடைசியிலுள்ள (4:176 ஆவது) வசனம் உமக்குப் போதுமானதாக இல்லையா?" என்று

கேட்டார்கள்.

நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்த "கலாலா" தொடர்பாகக்

குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில்

தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன்.

பின்னர் (தொடர்ந்து) கூறினார்கள்:

"இறைவா! நகரங்களின் ஆளுநர்களுக்கு உன்னையே சாட்சியாக்குகிறேன். நான் அவர்களை அந்த மக்களிடையே நேர்மையாக நடந்துகொள்வதற்காகவும் அவர்களுடைய மார்க்கத்தையும் அவர்களுடைய நபி (ஸல்) அவர்களது வழிமுறையையும் கற்றுத் தருவதற்காகவுமே அனுப்பிவைத்தேன். மேலும், அவர்களுக்குப் போரிடாமல் கிடைத்த ("ஃபய்உ" எனும்) செல்வத்தை அவர்கள் தம்மிடையே (முறையோடு) பங்கிட வேண்டும்; அவர்களுடைய விவகாரங்களில் சிக்கல் எழும்போது அதை என் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் (என்றும் கூறி அனுப்பினேன்(.

மக்களே! நீங்கள் இரு செடிகளிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள். அவ்விரண்டையும் நான் அருவருப்பானவையாகக் கருதுகிறேன். இந்த வெங்காயமும் வெள்ளைப் பூண்டுமே (அவை இரண்டுமாகும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது ஒருவரிடமிருந்து அவற்றின் துர்வாடை வருவதைக் கண்டால், அவரை "அல்பகீஉ" பொது மையவாடிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருமாறு கூறுவார்கள். எனவே, யார் அதைச் சாப்பிட விரும்புகிறாரோ அவர் அதைச் சமைத்து அதன் வாடையை நீக்கிக்கொள்ளட்டும்.

-மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 980.

அத்தியாயம் :5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

இந்த மாதிரி சஹப்பாக்களின் படித்தரங்கள் புரிந்தால் மட்டும் தான் பின்னர் நடக்கும் குழப்பங்களில் எது சத்தியம் என்பது புரியும். எனவே சஹப்பாக்களின் அந்தஸ்தை அல்லாஹ்வும் ரஸீலும் பிரித்து காட்டியுள்ளார்கள்.

முதலில் இரண்டு பெரிய பிரிவுகள் மொத்தமாக முஹாஜிர்கள், அன்சாரிகள் என பிரிக்கலாம்.

முஹாஜிர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு வந்தவர்கள். அன்சாரிகள் மதினாவாசிகள்.

முஹாஜிர்களில் முதன்மையானவர்கள் "அஸ்ஸாபிக்கூளல் அவ்வளூன்"- அந்தஸ்தில் மூந்தியவர்கள்

அபுபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), கதிஜா(ரஹு), ஸாத் பின் அபிபக்காஸ்(ரலி), அம்மான் பின் யாஸிர்(ரலி), பிலால்(ரலி), தஃல்ஹா(ரலி), ஜூஃபைர்(ரலி)

இதை அல்லாஹ் பிரிக்கிறான்.

At-Taubah 9:100-101

والسَّبِقُونَ الْأَوَّلون من المهجرين والأنصار والَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَاعدَّ لَهُمْ جَنَّتٍ تَجْرِي تَحْتَهَا (100) الْأَنْهرُ خَلِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْأَعْرَابِ مُنفِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا على النفاق لا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ مَنْعَذِّبُهُمْ مُرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ (101) إلى عذاب عظيم

(100) இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீNழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் -இதுவே மகத்தான வெற்றியாகும்.

(101) உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.

ரலியல்லாஹு அன்ஹு, ரஹியல்லாஹு அன்ஹு என்பதன் அர்த்தம்

அல்லாஹ் பொருந்திக் கொண்டவர்கள். இவர்களின் வார்த்தை தலீலாக

ஏற்கப்படும்.

இதில் பத்து சஹப்பாக்கள் சுவார்க்கவாசிகள்(அஷ்வத்துல் முபாஸ்ஸரா). அபுபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), அபு ஹுபைத்(ரலி), தல்ஹா(ரலி), ஜூஃபைர்(ரலி), ஸாத் பின் அபிபக்காஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹவ்: சப்(ரலி), சையித் பின் ஜைத் (ரலி). இவர்கள் ரஸிலுல்லாஹ்வின் மாணவர்கள். இவர்களுக்கு அனைத்து துறைகளிலும் நபிவழி தெரிந்தவர்கள். சிறந்த நிர்வாகிகள் இவர்களுக்கு அரசியலில் சிறந்தவர்கள் என்று அல்லாஹ் சான்றிதழ் வாங்கியுள்ளார்.

அ). இந்த பத்து பேர்கள் முதலிடம்(அஷ்வத்துல் முபஸ்ஸரா),

ஆ). "அஸ்ஸாபிக்கூளல் அவ்வளூன்" பத்து பேர்களில் வராதவர்கள்

இ). முஹாஜிர்களில் ஹிஜிரத் செய்தவர்கள்(மக்கா வெற்றி முன் வந்தவர்கள்),

ஈ). அன்ஸாரிகள்(ஹிஜிரத்துக்கு முன் மக்கா வந்து ஏற்றவர்கள், ஹிஜிரத்துக்கு பின் ஏற்றவர்கள்

உ).ஃபத்ரு போரில் கலந்து கொண்ட சுஹதாக்கள்(அனைவரும் பத்து பேர்களுக்கு சமமாக மாட்டார்கள். ஆனால் சுவர்க்கவாசிகள்)

ஊ). ஊதைபியா ஒப்பந்தத்தில் கலந்து கொண்டவர்கள்.

எ). மக்கா வெற்றிக்கு முன் தானாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்

ஏ). துலக்காக்கள்- மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள். மக்கா வெற்றியின் போது கட்டாயத்தால் ஏற்றவர்கள் மூஹாவியா(ரலி), அபுசுஃபியான்(ரலி)

ஐ). இந்த அரபு கிராமவாசிகள்.

புகாரி 3673, முஸ்லீம் 4697, அஹ்மத் 11226.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.

என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

भी : 3673.

அத்தியாயம் : 62. நபித் தோழர்களின் சிறப்புகள்

இந்த பத்து பேர்கள் இந்த சமுதாயத்தின் காவலர்கள். இவர்கள் கண்காணிப்பாளர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

Al-Ma'idah 5:12

ولقد أخذ الله ميثاق بنى إسْرَاعِيل وبعثنَا مِنْهم اثني عشر نقيبا وقال الله إلى معكم لبن المتم الصلوة وأنيتُمُ الزَّكوة وأمَنتُمْ بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا حَسَنًا لأكفرن عنكم سياتكم ولا دخلتكم جَنَّتِ تجري من تحتها الأنهر فمن كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سواء السبيل

நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்;. மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான், "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்."

At-Taubah 9:105

وقُلِ اعْمَلُوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى علم الغيب والشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

(நபியே! அவர்களிடம்;) "நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும் அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்" என்று கூறும்.

இந்த பத்து அஷ்வத்துல் முபஸ்ஸரா அரசு விவகாரங்களில் தங்களுக்குள் முடிவு செய்து செய்து கொள்வார்கள். இந்த முடிவு அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும்.

இதனால் ஒரு சம்பவம் நடக்கிறது. அலி(ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) தேர்வில் அதிப்தியில் இருந்த சமயத்தில் (தன்னை அழைக்காத காரணத்தால்) அபுசுஃபியான்(ரலி) அவர்கள் நீங்கள் அபுபக்கர்(ரலி) தேர்வில் அதிப்தியில் இருப்பது தெரியும். நபியவர்களும் நீங்களும் சேர்ந்த பனுஹாசிம் குலத்தை சேர்ந்த நீங்கள் இருக்கும்போது, பனுஹதியை சேர்ந்த அபுபக்கர் (ரலி) தேர்வு தவறு என்றும் நீங்கள் சொன்னால் ஒரு படையுடன் சென்று முடிவு செய்யலாம் என்று கூறுகிறார். அதற்கு அலி(ரலி) குலத்தை நபியவர்கள்(ஸல்) என்றோ அழித்து விட்டார்கள். நான் அதிப்தியில் இருப்பது வேறு காரணம். எந்த படையை அழைத்து வர போகிறீர்கள், அகழ் போரில் அழைத்து வந்த படையா என்றும் இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறினார்.

இவர்களின் முடிவுகள் தான் இஜ்மா..

ஒரு ஹகிம் ஹதீஸில் நபிகளார்(ஸல்) அவர்கள், எனக்கு பிறகு நீங்கள் பல கருத்துவேறுபாடுகள் காண்பீர்கள். அப்போது என்னுடைய சுன்னத்தையும், குலாஃபாஹேராஷித்தின்களின் சுன்னத்தையும் கடைப்பிடியுங்கள் என்று கூறினார்கள்.

இந்த குலாஃபாஹேராஷித்தினகளை எதிர்த்தவர்கள் காரிஜியாக்கள். இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள். ஏனேனில் கஃலிபாவைஎதிர்த்தார்கள். இரண்டு நபித்தோழர் கூறும் கருத்துக்களை சரி காண இந்த படித்தரங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

3) அபுபக்கர்(ரலி) அவர்களுக்கு இருந்த சவால்கள்:

நபிகளார்(ஸல்) சமயத்தில் இருந்த குல ஏற்றத்தாழ்வுகள் மீண்டும் எழுந்தன. இதுவே ஷியா சுன்னி பிரிவு உருவாக காரணம். அந்த குலத்தை நபிகளார் (ஸல்) அழிக்கவில்லை. ஏனெனில் தங்களை அடையாளம் காண தான் பயன்படுத்த சொன்னார்கள். இதை கொண்டு எந்த எற்றதாழ்வுகளும் சொல்ல தடை செய்தார்கள். இது தான் அபுபக்கர் (ரலி) சமயத்தில் வெளிப்படுகிறது. இந்த கிராமவாசிகள் நாங்கள் ஜகாத் தரமாட்டோம் என்றும் எங்களிடையே இன்னொரு நபி வந்துள்ளார் எனவும் பிரச்சினை செய்கிறார்கள்.

ஒரு ஹதீஸ்

அபூ தர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)' என்றார்கள். நான் (மீண்டும்) 'அவர் விபசார புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)' என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி(சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அபுல் அஸ்வத் அத்துஅலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூ தர்(ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே' என்று கூறிவந்தார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்.

(விபசாரம், திருடு போன்ற குற்றம் புரிந்த ஒருவர் இறக்கும்போதோ அதற்கு முன்போ மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரி 'லாஇலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)' என்று சொல்லியிருந்தால்தான் அவருக்கு இவ்வாறு மன்னிப்பு அளிக்கப்படும். 48

ஸஹீஹ் புகாரி : 5827.

அத்தியாயம் :77. ஆடை அணிகலன்கள்

இதில் கலீமா சொன்னால் சொர்க்கம் போய்விடலாம் என்று நபிகளார்(ஸல்) கூறியது நமக்கில்லை. அந்த கிராமவாசிகளுக்கு தான்.

இந்த குலப் பிரிவினைகள் வெளிவந்தன.

அபுபக்கர்(ரலி) அவர்கள் இதை திறமையாக சிறந்த முறையில் கட்டுப்படுத்துகிறார்கள்.

நபிகளாரின் (ஸல்) சமயத்திலும் இந்த குலப்பிரிவினைகள் முற்றிலும் அழியவில்லை. அடக்கப்பட்டது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் தொடர்பாக அவதூறு பேசப்பட்டபோது எனக்க இன்னும் அது தெரிந்திராத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள். ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைத் தக்கபடி போற்றிவிட்டு, 'என் மனைவியின் மீது அபாண்டப் பழி சுமத்தியவர்களின் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என்
மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான்

காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து

அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச்

சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில்

வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார்' என்று

கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து, 'அவர்களின்

கழுத்தைச் சீவுவதற்கு என்னை அனுமதியுங்கள் இறைத்தூதர் அவர்களே!"

என்று கூறினார்கள். 'கஸ்ரஜ்' குலத்தாரிடையேயிருந்து ஒருவர் எழுந்து,

'பொய் சொன்னீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (அவதூறு

கற்பித்தவர்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால், அவர்களின்

கழுத்துச் சீவப்படுவதை நீர் விரும்பமாட்டீர்' என்று கூறினார். 'ஹஸ்ஸான்

இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் தாயார் அந்த மனிதரின் குலத்தைச்

சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். (அவர்களிடையே வாக்குவாதம் எந்த

அளவுக்கு முற்றிவிட்டதென்றால்) 'அவ்ஸ்' குலத்தாருக்கும் 'கஸ்ரஜ்'

குலத்தாருக்குமிடையே பள்ளிவாசலிலேயே குழப்பமும், கைகலப்பும்

மூண்டுவிடப்பார்த்து. (இவற்றில் எதுவுமே) எனக்குத் தெரியாது.

அன்று மாலை நான் (இயற்கைத் தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பாருடன் புறப்பட்டேன். (வழியில்) அவரின் கால் (அவரின் கம்பளி அங்கியால்) இடறியது. அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்' என்று கூறினார். நான், 'என் அன்னையே! உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?' என்று கேட்டேன். அவர் மௌனமாயிருந்தார். பிறகு இரண்டாவது முறையாக அவரின் கால் இடறியது. அப்போதும் அவர், மிஸ்தஹ் நாசமாகட்டும்' என்று கூறினார். நான், 'உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?' என்று கேட்டேன். பின்னர், மூன்றாம் முறையாக அவரின் கால் இடறியது. அப்போதும் அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்' என்று கூறினார். நான் அவரை அதட்டினேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனை உங்களுக்காகத்தான் திட்டுகிறேன் என்று கூறினார். நான், 'என்னுடைய எந்த விஷயத்திற்காக?" என்று கேட்டேன். அப்போதுதான் அவர் என்னிடம் விஷயத்தை உடைத்தார். நான், 'இப்படியா நடந்தது?' என்று கேட்டேன். அவர் 'ஆம்!' அல்லாஹ்வின் மீதாணையாக, (இப்படித்தான் நடந்தது)' என்று பதிலளித்தார். நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். (அதிர்ச்சியில்) நான் எங்கே போனேன்; எதற்காகப்

போனேன் என்பது கூட எனக்கு நினைவில்லாதது போலாகிவிட்டது. அதில்

கொஞ்சமோ அதிகமோ எதுவும் நினைவில் இல்லை. எனக்குக் காய்ச்சல்

வந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'என் தந்தையின் வீட்டிற்குஎன்னை அனுப்பிவிடுங்கள்' என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.

நான் வீட்டினுள் சென்றபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி) அவர்களைக் கீழ்த்தளத்திலும் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களை (குர்ஆன்) ஓதியவர்களாய் வீட்டின் மேல்தளத்திலும் இருக்கக் கண்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! என்ன விஷயமாக வந்திருக்கிறாய்? என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து செய்தியைச் சொன்னேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அளவிற்குக் கவலை அவர்களுக்கு ஏற்படவில்லை! அப்போது அவர்கள் என் அன்பு மகளே! இந்த விவகாரத்தை, உன் மீது (பெரிதாக்கிக் கொள்ளாமல்) இலோசாக்கிக் கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! தன்னை விரும்பும் கணவரிடம் இருக்கும் ஓர் அழகிய பெண்ணுக்குச் சக்களத்திகள் பல பேர் இருக்க, அவர்கள் அவளின் மீது பொறாமைப்படுவதும், அவளைப் பற்றிக் குறை கூறுவதும் இயல்பு தான் என்று கூறினார்கள். எனக்கு ஏற்பட்ட அளவிற்கு இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்படவில்லை என்பது இதிலிருந்து தெரிந்தது. நான் 'என் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா?" என்று கேட்டேன். தாயார் 'ஆம்' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு..?' என்று கேட்டேன். 'ஆம்' அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியும் என்றார் என் தாயார். நான் கண்ணீர் சிந்தி வாய்விட்டு அழலானேன். அபூ பக்ர்(ரலி) வீட்டின் மேல் தளத்தில் ஒதிக்கொண்டிருக்கையில் என் அழுகைச் சப்தத்தைக் கேட்டு கீழே இறங்கி வந்தார்கள். என் தாயாரிடம் 'இவள் விஷயம் என்ன?' என்று கேட்டார்கள். என் தாயார், 'அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதூறுச் செய்தி அவளுக்கு எட்டிவிட்டது' என்று கூறினார். உடனே அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்தன. பிறகு அவர்கள், 'என் அன்பு மகளே! நீ என் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டுமென்று உன்னிடம் வற்புறுத்துகிறேன்' என்று கூறினார்கள். நான் திரும்பி வந்துவிட்டேன்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்திருந்து என்

பணிப் பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் 'இல்லை!

அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து 'அவர்கள் பிசைந்து வைத்த

மாவை' அல்லது 'அவர்கள் குழைத்து வைத்த மாவை'த் தின்றுவிட்டுச்

செல்லும் அளவிற்கு (மெய் மறந்து) உறங்கிவிடுவார்கள் என்பதைத் தவிர

வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடமிருந்து) அறியவில்லை' என்று
சொல்லியிருந்தாள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்!! என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் 'அல்லாஹ்வின் மீதாணையாக, பொற்கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமாறுவற்றதாகக் கருதுவோனோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன் என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் 'அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அன்னியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே!' என்று கூறினார். பிறகு அவர் இறைவழியில் வீரமரணம் அடைந்தார். என் தாய் தந்தை இருவரும் என்னிடம் காலையில் வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு வரும்வரை அவர்கள் (என்னிடமே) இருந்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, என் தாய் தந்தை

இருவரும் (ஒருவர்) என் வலப்பக்கமும், (மற்றவர்) என் இடப்பக்கமும்

இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, போற்றிவிட்டு,

'ஆயிஷா! நீ 'தீய செயல் ஏதும் புரிந்திருந்தால்' அல்லது

'அநீதியிழைத்திருந்தால்', அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்!

ஏனெனில் அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து பாவமன்னிப்புக்

கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்' என்று கூறினார்கள். அப்போது

அன்சாரிப் பெண்யொருத்தி வந்து வாசலில் அமர்ந்திருந்தாள். நான்,

(நபி(ஸல்) அவர்களிடம்,) 'இந்தப் பெண் பெளியே சென்று ஏதாவது

சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா?' என்று கேட்டேன். பிறகு,

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள். நான் என்

தந்தையின் பக்கம் திரும்பி, இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்' என்றேன்.

அவர்கள் 'நான் என்ன பதில் சொல்வது?' என்று கேட்டார்கள். பிறகு நான்

என் தாயாரிடம் திரும்பி, இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்!" என்றேன்.

அவர்கள், 'நான் என்ன சொல்வேன்?' என்று கேட்டார்கள். அவ்விருவருமே

பதில் அளிக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழிகூறி,

அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுடைய தகுதிக்கேற்ப அவனைப்

போற்றிவிட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்)

செய்யவில்லையென்று உங்களிடம் சொன்னால், வலிவும் உயர்வும் மிக்க

அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான். அது

எனக்கு உங்களிடம் பயனளிக்கப்போவதில்லை. நீங்கள் அதைப்

பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும்விட்டது. நான் அப்படிச்செய்தேன் என்று சொன்னால் நான் அப்படிச் செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிவான் 'தனக்குத்தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டாள்' என்று நீங்கள் சொல்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூஸுஃப்(அலை) அவர்களின் தந்தையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக காண்கிறேன்' -அப்போது (யூஸுஃப் அவர்களின் தந்தை) யஅகூப்(அலை) அவர்களின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தேன். ஆனால், நினைவுக்கு வரவில்லை. (இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடமே பாதுகாப்புக் கோருகிறேன்' என யஅகூப்(அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.

அந்த நேரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது, (குர்ஆன்வசனங்கள் அருளப்பெற்றன. எனவே, நாங்கள் மௌனமாக இருந்தோ. 'வஹீ (வேத அறிவிப்பு அருளப்படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்டபோது, நான் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைத் தெளிவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும், 'ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான்' என்று கூறினார்கள். நான் அன்று கடுங்கோபத்துடன் இருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் 'நீ எழுந்து நபி(ஸல்) அவர்களிடம் செல்!' என்று கூறினர். அதற்கு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவுமாட்டேன். அவர்களைப் பாராட்டவுமாட்டேன். உங்கள் இருவரையுங் கூட பாராட்டமாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்றவளாக அறிவித்து வேத அறிவிப்பை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என் மீதான அவதூற்றைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை; அதை மாற்ற முயலவுமில்லை' என்று சொன்னேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

மேலும், ஆயிஷா(ரலி) (இவ்வாறு) கூறிவந்தார்கள்: (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுதலின் காரணத்தினால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்கு பெறவிடாமல்) காப்பாற்றிவிட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே கூறினார்கள். ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறுபேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்து போனார். (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹூம், ஹஸ்ஸான்
இப்னு ஸாபித்தும் ஆவர் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும் பங்கு வகித்தவனும் அவன்தான் ஹம்னாவும் கூட

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி), 'மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும்

இனி ஒருபோதும் செய்யமாட்டேன்' என்று சத்தியம் செய்தார்கள். அப்போது

அல்லாஹ் 'உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர்

(தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் ஹிஜ்ரத்

செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம்

செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம்

ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்)

பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு

மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும்

மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கிறான்' எனும்

(திருக்குர்ஆன் 24:22 வது) இறைவசனத்தை அருளினான். (இந்த வசனத்தில்)

'உலுல் ஃபள்ல்' (செல்வம் படைத்தோர்) என்று அபூ பக்ர்(ரலி) அவர்களையே

அல்லாஹ் குறிப்பிட்டான். மஸாக்கீன்' (ஏழைகள்) என்று மிஸ்தஹ்

அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூ பக்ர்(ரலி), 'ஆம்,

அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் இறைவா! எங்களை நீ

மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்' என்று கூறி, தாம் முன்பு செய்து

வந்தது போன்றே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத்

தொடங்கினார்கள்.

ஸஹீஹ் புகாரி :4757.

அத்தியாயம் :65. திருக்குர்ஆன் விளக்கவுரை

இந்த குலப்பிரிவினைகள் உஸ்மான்(ரலி) காலத்தில் மேலும் பெருகி ஷியா, சுன்னி உருவாக காரணமாகிறது.

ஜாபிர்(ரலி) கூறினார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூ முஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப்புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக்காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, 'அன்சாரிகளே!' என்றழைத்தார். முஹாஜிர், 'முஹாஜிர்களே!' என்றழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து, 'அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?' என்று கேட்டுவிட்டு, அவ்விருவரின் விவகாரம் என்ன?" என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த அறியாமைக் கால அழைப்பைவிட்டு விடுங்கள். இது அருவருப்பானது' என்று கூறினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா?' நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றி விடுவார்கள்' என்று (விஷமமாகச்) சொன்னான். உடனே உமர்(ரலி), இந்தத் தீயவனை நாம் கொன்று விட வேண்டாமா? இறைத்தூதர் அவர்களே!' என்று அப்துல்லாஹ் இப்னு உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அவனைக்) கொல்ல வேண்டாம். மக்கள், 'முஹம்மது தன் தோழர்களை கூட கொல்கிறார்' என்று பேசுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

ណាំ បុशी : 3518.

அத்தியாயம் :61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

இன்னொரு சம்பவம் ரஹீக்கில் வரும்

ஹவுஸ், கஜரஜ் கூட்டத்தார் இஸ்லாத்தை ஏற்ற பின் பேசி கொண்டிருப்பார்கள். அதை பார்த்த யூத கிழவன், அங்கு வந்து நீங்கள் முந்தைய புவாஸ் போரில் அடைந்த வெற்றிகளை பாடுங்கள் என்று கேட்பான். ஒரு கூட்டம் பாடும், அடுத்தவர்கள் மாறாக பாடுவார்கள். இப்படி

குலப் பிரச்சினை வரும். அங்கும் நபிகளார் (ஸல்) அமைதிப்படுத்துவார்கள்.



இந்த பிரிவினைகளை அபுபக்கர்(ரலி) அவர்கள் கட்டுப்படுத்தினார்கள்.

1). மக்காவில் இருந்தவர்களும் மதினாவில் இருந்தவர்களும் நபி(ஸல்) முன் இருந்த மாதிரி சிறுசிறு பிரச்சினைகளால் சண்டையிடாமல் வஃஹீ இல்லாமல் நிர்வகித்து சென்றது.

2). இந்த பல சிந்தனைகள் கொண்ட மக்களை அடக்கி வைப்பது மட்டுமில்லாமல் அவர்களை கொண்டு நபிகளார்(ஸல்) ஏற்படுத்திய நிதமான ஆட்சியை பிற நாடுகளுக்கு பரப்புவது.

இதை அபுபக்கர்(ரலி) அவர்கள் சிறப்பாக கையாண்டார்கள். ஒவ்வொரு முடிவையும் அற்புதமாக சரியாக எடுத்தார்கள்.

நபிகளாரை(ஸல்) அதிகமாக நேசித்தவர் அபுபக்கர்(ரலி) ஆனால் அவர் மரணத்தில் நிலைகுளையாமல் இருந்தார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு அவர் சிறந்தவர் என்று நபிகளார்(ஸல்) கூறியிருந்தார்கள். அடுத்தடுத்த வேலைகளை (கஃலிபா தேர்வு, அடக்கம் செய்யும் பணி, மக்களின் மனநிலை) அந்த துக்கமான நிலையிலும் தெளிவாக செய்தார்கள். நபிகளாருக்கு(ஸல்) புகழை சேர்த்தார்கள். இது "The 100: A Ranking of the Most Influential Persons in History" என்ற புத்தகத்தில் நபிகளார்(ஸல்) பெயர் மட்டுமில்லை, உமர்(ரலி) அவர்களின் பெயரும் உள்ளது. அபுபக்கர்(ரலி) அதிக காலம் ஆளவில்லை, அதிக நிலப்பரப்பில் சமுதாய மறுமலர்ச்சி அடையவில்லை என்பதால் இடம் பெறவில்லை.




COMMENTS

5-latest-800px-slider
Name

Islamic News,1,இறுதி சமுதாயம்,1,கர்பலா,1,
ltr
item
Tamil Islamic Reminder: நபி (ஸல்) விட்டுச்சென்ற 10 தலைவரகள்
நபி (ஸல்) விட்டுச்சென்ற 10 தலைவரகள்
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhBGisqWafr8xte1wLTSdSkhCoiuPPV_ESte-_PpYV-a-CkRFTOa7A5GQKn0bAmhHNQGSktnaDFs21-3YUabcCHA1NZt-Ic_4e_ePbS29IADh57HEut_r9RjFVL7rMcfjPNmZzocQhoS6i76arb9BIlBF1QBa--ao9oR4fsOLdhPHt9O5Y-KROvRLCg0YWB=w640-h354
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhBGisqWafr8xte1wLTSdSkhCoiuPPV_ESte-_PpYV-a-CkRFTOa7A5GQKn0bAmhHNQGSktnaDFs21-3YUabcCHA1NZt-Ic_4e_ePbS29IADh57HEut_r9RjFVL7rMcfjPNmZzocQhoS6i76arb9BIlBF1QBa--ao9oR4fsOLdhPHt9O5Y-KROvRLCg0YWB=s72-w640-c-h354
Tamil Islamic Reminder
https://tamilislamicreminder.blogspot.com/2024/07/10.html
https://tamilislamicreminder.blogspot.com/
https://tamilislamicreminder.blogspot.com/
https://tamilislamicreminder.blogspot.com/2024/07/10.html
true
4626194886987855171
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content